மும்பை புறநகர் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார் ஹன்சிகா. சந்தை மதிப்பு பலகோடி. ஹன்சிகா நல்ல சமூக சிந்தனை உள்ளவராச்சே. அவருக்கும் சொத்துக் குவிப்புல ஆசை வந்திருச்சோ என்ற சந்தேகம் வர, ஹன்சிடமே கேட்டோம்.
''தென்னிந்தியா முழுக்க என்னை நேசிக்கிற உள்ளங்கள், ரசிக்கிற ரசிகர்கள், அன்பான அம்மா, நான் வளர்க்கிற அழகான குழந்தைகள் என இந்த சொத்துகள் எனக்கு போதாதா? இதுக்கு மேலேயும் எனக்கு எதுக்கு சொத்து? ஆனால் நான் மும்பையில ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறது உண்மைதான். அது நான் பங்களா கட்டி சொகுசா வாழ்ற துக்கு இல்ல.
(அதான் எங்க மனசுல வாழறீங்களே). அந்த ஒரு ஏக்கர்ல நிறைய பிளான் வச்சிருக்கேன். நான் வளர்க்கிற, வளர்க்கப்போகிற குழந்தைகளுக்கு ஒரு இல்லம் கட்டணும், முதியவர்களுக்கு ஒரு இல்லம் கட்டணும். இன்னும் நிறைய கனவும் திட்டமும் இருக்கு. நடிப்புங்கறது நான் இப்போ செய்ற ஒரு தொழில், அதுவே என்னோட வாழ்க்கை இல்லை. அதுக்குமேல நிறைய இருக்கு. அதுக்கான முதல்படிதான் இது.
இன்னொரு விஷயம் தெரியுமா? சொத்து கள் வாங்குற அளவுக்கு நான் இன்னும் சம்பளம் வாங்கல. இப்போ இடம்தான் வாங்கி யிருக்கேன். கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிக்கல. அதுக்கு இன்னும் நிறைய படங்கள்ல நடிச்சு பணம் சேர்க்கணும்'' என்றார். ஹன்சுக்கு பெரிய மனசு, நிறைய சான்ஸ் கொடுத்து சம்பளத்தையும் ஏற்றிக் கொடுங்க புரொட்யூசர்ஸ்...
Saturday, February 28, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment