Wednesday, February 25, 2015

விஜய் சேதுபதியுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நானும் அவரும் போட்டியா என்பதை காலமும் மக்களும்தான் தீர்மானிக்கணும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகராக மாறியுள்ளார். அவர் இந்த நிலைக்கு வர தனுஷ் மிக உதவியாக இருந்தார்.

அவர் தயாரித்த எதிர்நீச்சல்தான் சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோவாக்கியது. அடுத்து காக்கிச் சட்டையைத் தயாரித்துள்ளார்.


இந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை தயாரிக்கிறார் தனுஷ்.

இதனால் விஜய் சேதுபதிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் உரசல், மோதல் என செய்திகள் வெளியானகி. சிவகார்த்தியை மட்டம் தட்டத்தான் விஜய் சேதுபதியை உயர்த்திப் பிடிக்கிறார் தனுஷ் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து விஜய் சேதுபதி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "யாருக்கு யார் போட்டிங்கிறதை காலமும் மக்களும்தான் தீர்மானிக்கணும். நானா போய் 'வாங்க... நாம சண்டை போடலாம்'னு யாரையும் கூப்பிட முடியாது.

நடிக்க வந்தப்ப வறுமையை ஜெயிக்கிறது பெரிய விஷயமா இருந்தது. இப்போ முந்தின படங்களைவிட ஒரு படி மேல தாண்டிப் போறது சவாலா இருக்கு. இதுல எங்க போட்டி போட!

நான் 'எதிர் நீச்சல்' நடிக்கும்போது, விஜய் சேதுபதி நடிச்ச 'பீட்சா' படம் ரிலீஸ் ஆச்சு. அவரோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசி பாராட்டினேன். நேர்ல பார்த்தா, நல்லா பேசிப்போம்.

சேர்ந்து நடிக்கணும்னா... இப்போதைக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பண்ற ஐடியா இல்லைங்க. முதல்ல தனி ஹீரோவா சக்சஸ் காட்டணும். ரெண்டு பேரையும் ரசிக்கிற மாதிரி சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட் வந்தா, சேர்ந்து நடிக்கலாம். ஆனா, இதுவரை யாரும் என்கிட்ட அப்படி ஒரு ஐடியாவோடு வரலையே!''

0 comments:

Post a Comment