Tuesday, February 24, 2015



கடந்த 41 வருடங்களாக சியாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட முதன்முதலாக 'சிகரம் தொடு' என்ற தமிழ்ப்படம் தேர்வாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்த திரைப்பட விழாவில் பாலிவுட் திரைப்படங்களான தீவார், ஷோலே, ஏக் துஜே கேலியே போன்ற சில படங்கள் மட்டுமே தேர்வாகியுள்ள நிலையில் முதன்முறையாக ஒரு தமிழ்ப்படம் தேர்வாகியுள்ளது கோலிவுட் திரையுலகம் சிகரத்தை தொட்டுவிட்டது என்பதை நிரூபித்துள்ளது.

தூங்கா நகரம் படத்தை இயக்கிய இயக்குனர் கவுரவ் இயக்கிய இரண்டாவது திரைப்படம் 'சிகரம் தொடு. இந்த படத்தில் விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார், சத்யராஜ், சதீஷ், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

யூடிவி நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இந்த படம் சர்வதேச திரைப்படவிழாவில் தேர்வு செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் யூடிவி தனஞ்செயன் உள்பட பலர் இயக்குனர் கவுரவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

சிகரம் தொடு படத்தை அடுத்து கவுரவ் விரைவில் ஒரு ஆக்சன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கும் இவர், இந்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment