Tuesday, February 24, 2015


கடந்த 10 வருடங்களுக்கும் மேல் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் த்ரிஷா, நிஜ வாழ்க்கையில் நாய்கள் போன்ற உயிரினங்களிடம் அன்பு காட்டுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் PETA என்ற விலங்குகள் அமைப்பில் உறுப்பினராக கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறார். அவர் தனது வீட்டிலேயே நாய்களை பாசத்துடன் வளர்த்து வருவதுடன் தெருவில் துயரப்படும் நாய்களுக்கும் அவ்வப்போது உதவிகள் செய்து வருவது குறித்து அடிக்கடி செய்திகளில் நாம் பார்த்துள்ளோம்.

இந்நிலையில் த்ரிஷா தற்போது ஜெயம் ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கும் 'அப்பாடக்கர்' படத்தில் அவருக்கு நாய்கள் பிரியம் வைத்திருக்கும் ஒரு மாடல் கேர்ள் வேடம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெறும் பல காட்சிகள் தன்னுடைய நிஜவாழ்விலும் நடந்துள்ளதாகவும், இந்த படத்தின் காட்சிகளில் தான் மிகவும் ரசித்து நடித்ததாகவும் த்ரிஷா கூறியுள்ளார்.

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, சூரி, விவேக் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். எஸ்.தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை செல்வா எடிட்டிங் செய்கிறார். இந்த படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளது.

0 comments:

Post a Comment