காக்கி சட்டை இயக்குனர் படத்தில் விஷால்?
சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் தற்போது வரும் 27ஆம் தேதி தனது அடுத்தபடமான காக்கி சட்டை படத்தை வெளியிடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் துரை.செந்தில்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஷால் நடிப்பதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் துரை செந்தில்குமார் செய்தியை அவர் உறுதியாக மறுத்துள்ளார்.
'கடந்த சில நாட்களாக மீடியாக்களில் விஷாலை நான் இயக்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. எனது அடுத்த கதைக்கு விஷால் பொருத்தமாக இருந்தால் கண்டிப்பாக நான் அவரை அணுகுவேன். ஆனால் இப்போதைக்கு காக்கி சட்டை படத்தை வெளியிடும் மும்முரத்தில் இருப்பதால் அடுத்த படம் குறித்து யோசிக்கவில்லை' என்று கூறியுள்ளார்.
மேலும் விஷால் இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் வரும் மார்ச் முதல் கலந்து கொள்ளவிருப்பதால் இப்போதைக்கு அவர் வேறு இயக்குனர் படங்களில் நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. விஷால்-காஜல் அகர்வால் இயக்கவுள்ள இந்த படத்தில் மீண்டும் விஷால் காக்கி சட்டை அணிந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment