அனுஷ்காவின் சாலைப்பயணம் திடீர் ஒத்தி வைப்பு
அனுஷ்கா சர்மா நடித்த 'பிகே' படத்தை அடுத்து பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய சாலைப்பயணத்தை மையமாக கொண்ட ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் NH 10. இந்த படம் வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் ஒருவாரம் ஒத்திவைக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் சென்சார் போர்டு ஒரு திரைப்படத்தில் இடம்பெறக்கூடாத வார்த்தைகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் உள்ள ஒருசில வார்த்தைகள் NH 10 படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த காட்சிகளில் படக்குழுவினர் சிறு மாற்றத்தை செய்யவிருப்பதால் இந்த காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அனுஷ்கா சர்மா, நீல் பூபாளம், தர்ஷன் குமார் மற்றும் பலர் நடித்துள்ள NH 10 திரைபடத்தை நவ்தீப் சிங் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment