ஹன்சிகாவின் மறக்க முடியாத முத்தம்
தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் ஹன்சிகா, புலி படத்திற்காக வெளிநாடு சென்றுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்ததுள்ளது என்பதை அறிவோம். இந்நிலையில் ஹன்சிகா தனது வெளிநாட்டு பயணத்தில் டால்பினுடன் கொஞ்சி விளையாடியதாகவும், அதற்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்ததாகவும் சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தனது வெளிநாட்டு பயணத்தில் மிகவும் மறக்க முடியாத பயணம் இது என்றும், டால்பினுக்கு முத்தம் கொடுத்த நிகழ்ச்சி தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு புது அனுபவமாக என்றும் தனது மனதில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய்யுடன் புலி, ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜுலியட், சிம்புவுடன் வேட்டை மன்னன் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் இதயம் முரளி ஆகிய படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் ஹன்சிகா, வாலு, உயிரே உயிரே ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

0 comments:
Post a Comment