Wednesday, February 25, 2015

லிங்கா வெளியாவதற்கு முன்பிருந்தே மீடியாவில் பரபரத்துக் கொண்டிருக்கும் கேள்விகள் ரஜினியின் அடுத்த படம் என்ன? என்பது தான்.

லிங்கா விவகாரம் அடுத்தடுத்த புதிய திருப்பங்களைச் சந்தித்து வந்ததால், ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை ஒத்திப் போட்டுவிட்டனராம்.

இப்போது மீண்டும் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன. எந்திரன் இரண்டாம் பாகம் அல்லது ஹாலிவுட் பாணியிலான ஒரு படத்தை ரஜினியை வைத்து உருவாக்கப் போவதாகவும், ஷங்கர்தான் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் குறித்து ஏற்கெனவே இருமுறை ரஜினியும் ஷங்கரும் பேசியுள்ளார்களாம். ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருப்பதாகவும், மேலும் ஒரு கதாநாயகியும் படத்தில் உண்டு என்றும் கூறுகிறார்கள்.

கோச்சடையான் மற்றும் லிங்காவை இந்தியில் சரியாக வெளியிடாமல் சொதப்பியதில் ரஜினிக்கு ரொம்பவே வருத்தம் என்பதால், இந்த முறை இந்தியிலும் படத்தை கச்சிதமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.

0 comments:

Post a Comment