நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தனுஷ் தொட்டதெல்லாம் பொன் ஆகும் நேரம் இது, அவரது ராசியில் சுக்ரன் உச்சத்தில் இருக்கிறான் அதனாலதான் எல்லாம் என்று ஒரு கூட்டம் சொன்னாலும், தனுஷின் கடின உழைப்புக்கு கடவுள் கொடுத்த பரிசு தான் இந்த வெற்றி.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஷமிதாப் படம் ஒரளவிற்கு இங்கு வெற்றி பெற்றாலும் மணிரத்னத்திடன் இருந்து வாழ்த்து வந்ததே அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறலாம். அதோடு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான அனேகன் படம் இதுவரை தனுஷின் எந்த படமும் செய்யாத வசூலை செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படி ஏகப்பட்ட சந்தோஷத்தோடு தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் தயாரிக்கபோகிறாராம் தனுஷ், அதற்கான பேச்சுவார்த்தைகளில் பிஷியாக உள்ள தனுஷ் இயக்குனர் தேர்தெடுக்கும் உரிமையை கமலிடமே விட்டுவிட்டாராம். அதோடு அந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம் அதில் அவருக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்கவுள்ளாராம்.

0 comments:
Post a Comment