தனது சண்டமாருதம் பட வெளியீட்டை ஒட்டிய பிரமோஷன்கள் ஒருபுறம் இருக்க, லிங்கா பிரச்சனையில் ரஜினியின் இமேஜை குலைக்க முயலும் விநியோகஸ்தர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்த பெருமளவு நேரம் ஒதுக்கி வந்தார் அவர். ரஜினி தருவதாக ஒப்புக் கொண்டு விட்டார். இவர்கள் பெறுவதாக சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பதில்தான் கொள்ளை இழுபறி.
இந்த நிலையில் இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் சிங்காரவேலன் தலைமையிலான விநியோகஸ்தர்கள் சரத்குமாரை சந்திக்கிறார்கள். வெளியூரிலிருந்த சிங்காரவேலனுக்கு நேற்று அழைப்பு விடுத்த சரத், எவ்வளவு வேலையாக இருந்தாலும் ஓரம் தள்ளி வைத்துவிட்டு உடனே வாங்க என்று உத்தரவிட்டதாக தகவல். அதையடுத்து அவசரம் அவசரம் தனது ‘புலம்பல் மேளக்கக்சேரியினருடன்’ சென்னை வந்து சேர்ந்திருக்கிறார் சிங்காரவேலன்.
இன்று மாலை ஐந்து மணிக்கு சரத்குமார் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் அழைப்புவிடுத்திருக்கிறார். லிங்கா பிரச்சனை இன்றோடு ஓயுமா? இல்லையென்றால் இன்னும் விஸ்வரூபம் எடுக்குமா? மாலை ஐந்து மணிக்கெல்லாம் தெரிந்துவிடும்!
.gif)
0 comments:
Post a Comment