Wednesday, February 25, 2015

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் J வடிவேல் முதன் முறையாக இயக்கும் கள்ளப்படம் திரைப்படத்தின் பாடல்கள் இன்று பிரபலமான வானொலியில் வெளியிடப்படுகிறது. நடிகர் விஷாலின் ‘V Music’ ஆடியோ நிறுவனம் இப்பாடல்களை வெளியிடுகிறது.
பூஜை , ஆம்பள பாடல்களின் வெற்றியை தொடர்ந்து ‘ V Music’ கள்ளப்படம் திரைப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறது. ‘இசை’, ‘காக்கி சட்டை’ படங்களின் டிஜிட்டல் காலர் டியூன்களையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு சேர்த்த பெருமையும் ‘ V Music’ நிறுவனத்தை சாரும்.
இறைவன் ஃபிலிம்ஸ் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வடிவேல் இசையமைப்பாளர் கே விடம் தனக்கு தேவையான இசையை அழகிய வடிவில் பெற்றிருக்கிறார்.
“ஒரு படத்தின் பாடல்களே அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட பாடல்களை பட்டி தொட்டியெங்கும் இட்டு செல்வது நல்ல ஆடியோ கம்பெனி. நல்ல ஆரம்பம் நல்ல முடிவை தரும். தாங்கள் வெளியிடும் பாடல்களை முன்னெடுத்து செல்வதில் பெருத்த உழைப்பை செலவிடும் ‘V Music’ நிறுவனம் எங்களது பாடலை வெளியிடுவது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. V என்றாலே விக்டரி அல்லது வெற்றி தானே“ என்று கூறினார் புதுமுக இயக்குனர் வடிவேல்.

0 comments:

Post a Comment