Wednesday, February 25, 2015


சைஸ் ஜீரோ படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை 100 கிலோ வரை கூட்டி பின்னர் குறைக்க உள்ளார். இரண்டாம் உலகம் படத்தை அடுத்து ஆர்யா, அனுஷ்கா ஜோடி சேரும் படம் சைஸ் ஜீரோ. தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படும் இந்த படத்தின் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. இந்த படத்திற்காக அனுஷ்கா முதன்முதலாக ஒரு விஷயத்தை செய்ய உள்ளார்.

சைஸ் ஜீரோ படத்தில் அனுஷ்கா குண்டு பெண்ணாகவும், ஒல்லிப்பாச்சானகவும் வருகிறாராம். குண்டு பெண் கதாபாத்திரத்திற்காக அனுஷ்கா தனது எடையை சுமார் 100 கிலோவாக்க வேண்டுமாம். ஒல்லிப்பாச்சான் கதாபாத்திரத்திற்காக பின்னர் எடையை குறைக்க வேண்டுமாம்.


அனுஷ்காவை வெயிட் போட வைத்து குண்டு பெண் கதாபாத்திரத்தை முதலில் படமாக்க உள்ளார்களாம். அதன் பிறகு அவரின் உடல் எடையை குறைக்க வைத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்குகிறார்களாம்.

சைஸ் ஜீரோ படத்தில் ஸ்ருதி ஹாஸன் கௌரவத் தோற்றத்தில் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தில் பரத், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment