Wednesday, February 25, 2015

சிகரத்தை தொட்டது விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு - Cineulagam


சியாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 41 வருடங்களாக இதுவரை எந்த தமிழ் திரைப்படங்களும் தேர்வானதில்லையாம்.
இந்த திரைப்பட விழாவில் பாலிவுட் திரைப்படங்களான தீவார், ஷோலே, ஏக் துஜே கேலியே போன்ற சில படங்கள் மட்டுமே தேர்வாகியுள்ளதாம். முதன்முதலாக சிகரம் தொடு என்ற ஒரு தமிழ்ப்படம் தேர்வாகியுள்ளது.
தூங்கா நகரம் படத்தை இயக்கிய கவுரவ் அவர்களின் இரண்டாவது படம் சிகரம் தொடு. இப்படத்தில் விக்ரம் பிரபு, மோகல் கஜ்ஜார், சத்யராஜ், சதீஷ், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தயாரித்த யூடிவி தனஞ்செயன் உள்பட பலர் இயக்குனர் கவுரவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment