இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புலி. இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் புலி படத்தை 2015 தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டம்போட்டுதான் படத்தின் வேலைகளும் நடந்து வந்தது, ஆனால் தற்போது திடீரென படத்தின் வேலைகளை அனைத்தும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறதாம், புலி படத்தை விஜய்யின் பிறந்த நாளுக்கு திரைக்கு கொண்டுவர திட்டம் போட்டு வேலை செய்து வருகிறார்கள் படக்குழுவினர்.
புலி படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்தை தாண்டிவிட்டதால் படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டுவருவதில் அவ்வளவு சிரமங்கள் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விரைவில் புலி படக்குழுவினர் கேரள காட்டிற்கு பயணிக்கப் போகிறார்கள். வாகமேன் மலைப்பிரதேசத்திற்கு தான் புலி படத்தின் அடுத்த ஷெட்யூலை திட்டம் போட்டிருக்கிறாராம் இயக்குநர் சிம்புதேவன். அந்த காட்டில் 2 பாடல்களையும் மற்றும் சில காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் சிம்புதேவன். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் எப்படியும் பாடல்கள் அனைத்தும் பட்டைய கிளப்பிவிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. விரைவில் புலி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் வேலைகளும் நடைபெற்று வருகிறதாம். தளபதி வருகைக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

0 comments:
Post a Comment