Friday, March 27, 2015


இந்தி படத்தில் ஷாருக்கான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ. 50 கோடி முதல் 60 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்.

ஷாருக்கான் நடிக்கும் படங்கள் உலக அளவில் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவிக்கின்றன. இந்த நிலையில் மும்பையில் பேட்டியொன்றில் தனது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி நினைவு கூர்ந்தார். அவர் கூறும்போது,

நான் நடிகனாவதற்கு முன்னால் தியேட்டர்களில் டிக்கெட் விற்பவராக பணியாற்றினேன். அப்போது எனக்கு 50 ரூபாய் சம்பளம் தருவார்கள். அது தான் என்னுடைய முதல் ஊதியம் என்றார்.

0 comments:

Post a Comment