Sunday, March 22, 2015


நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் நடித்து வரும் 'சாஹசம்' திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், இந்த படத்திற்காக இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கில் மாபெரும் ஹிட்டாகிய ஜுலாயி (Julayi) என்ற படத்தின் தமிழ் ரிமேக் படமான 'சாஹசம்' படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார். பிரசாந்த், அபிதா, அபி சரவணன், நாசர், துளசி, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அருண்விஜய் வர்மா இயக்குகிறார். எஸ்.தமன் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இன்னும் மீதமுள்ள இரண்டு பாடல்களின் படப்பிடிப்பை ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும், வரும் மே மாதம் 1ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் பாடல் ஒன்றில் நடிக்க ஆஸ்திரேலிய நடிகை ஒருவருடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இன்னும் சில நாட்களில் இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாஹசம் படத்தை முடித்த பின்னர் பிரசாந்த், அடுத்து 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக்கில் நடிக்கவுளார்.

0 comments:

Post a Comment