Wednesday, March 25, 2015


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய கவர்ச்சி நடிகைகளில் அனுராதாவும் ஒருவர். ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி ஆகியோருடன் இவரும் படத்துக்குப்படம் போட்டிபோட்டு கவர்ச்சி நடனமாடி வந்தவர். அதையடுத்து, தனது வாரிசான அபிநயஸ்ரீயையும் விஜய் - சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், மகளை தன்னைப்போல் இல்லாமல் கதாநாயகியாக்கவே ஆசைப்பட்டார் அனுராதா. ஆனால் ப்ரண்ட்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினியாக நடித்தபோதும், பின்னர் அபிநயஸ்ரீக்கு எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அம்மா வழியில் அவரும் அயிட்டம் நடிகையாக உருவெடுத்தார்.

ஆனபோதும், இவர் வந்த காலத்தில் கதாநாயகிகளே குத்துப்பாட்டுகளுக்கு ஆடத் தொடங்கியதால் அபிநயஸ்ரீயினால் பெரிதாக வளர முடியவில்லை. அதனால் அவ்வப்போது ஒரு படத்தில் தலைகாட்டி வரும் அவர், தற்போது விவேக் கதாநாயகனாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படத்திலும் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.

பாலிவுட் கவர்ச்சி நடிகைகள் ரேஞ்சுக்கு கலக்கல் காஸ்டியூமில் அபிநயஸ்ரீ ஆடியுள்ள அந்த பாடலில், விவேக்குடன் இணைந்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நான் கடவுள் ராஜேந்திரன, லொள்ளு சபா ராஜேந்திரன் ஆகியோரும் ஆடியுள்ளனர். மேலும், அந்த பாடல் விவேக் பேசி நடித்து பிரபலமான பஞ்ச் டயலாக்களை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்ற வரியில் அப்பாடல் தொடங்குகிறது.


0 comments:

Post a Comment