Wednesday, March 11, 2015


நடிகை ஸ்ருதி ஹாஸன் திருமணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாஸன். மூன்று மொழிகளில் ஓடியோடி நடித்து வரும்போதிலும் அவர் பாடல்களும் பாடுகிறார். ஸ்ருதி தற்போது விஜய் நடிக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார். புலி படத்தில் ஸ்ருதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாட்டும் பாடியுள்ளார்.

தற்போது தானே நடிக்க வந்துள்ளேன். அதற்குள் திருமணத்திற்கு என்ன அவசரம் என்கிறார் ஸ்ருதி.


நான் இன்னும் 6 ஆண்டுகள் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். அதன் பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

நான் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். விரைவில் திருமணம் செய்து கொள்ள எனக்கு காதலர் ஒன்றும் கிடையாது என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி.

என் ஆசைகள் நிறைவேறிய பிறகோ அல்லது ரசிகர்கள் என்னை பார்த்து சலித்துப் போனாலோ நான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்கிறார் ஸ்ருதி.

0 comments:

Post a Comment