Tuesday, March 24, 2015

தோசையை திருப்பி போடுவதாக நினைத்துக் கொண்டு தோசைக்கல்லையே திருப்பி போடுகிற அளவுக்கு முக்கிய விஷயங்களில் விறுவிறு திருப்பம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அந்த வகையில் சிங்காரவேலன்- லிங்கா பிரச்சனை- ரஜினி நஷ்டஈடு ஆகிய மூன்று விஷயங்களும் தொடர் சங்கிலியாக தினசரிகளையும் செய்தி நிறுவனங்களையும் பின்னிக் கொண்டிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இப்போது லிங்கா விஷயத்தில் எல்லாமே தலைகீழ்.

‘வில்லுக்கு விஜயன், விருந்தோம்பலுக்கு ராக்லைன் வெங்கடேஷ்’ என்று சிங்காரவேலன் புகழ்வதென்ன? இவ்வளவு நல்ல மனுஷனா நீங்க? இது தெரிஞ்சுருந்தா அன்னைக்கு உங்களை நேர்ல கூப்பிட்டு பேசியிருப்பேன். இவ்வளவு பிரச்சனையும் வந்தே இருக்காது என்று ராக்லைனும் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டிருக்க, எல்லாவற்றையும் ஜம்ப் அடித்துவிட்டு இன்னும் ஒரு ஸ்டெப் முன்னேறிவிட்டார் சிங்காரு. எப்படி?

லிங்கா படத்தின் 100 வது நாள் விழா சென்னையில் நடந்தது அல்லவா? அந்த நாளில் நாளிதழ்களில் ரஜினியை வாழ்த்தி விளம்பரம் கொடுத்துவிட்டார். கும்பிட்ட கைக்குள் துப்பாக்கியை பார்ப்பது சினிமாவுலக துரோகங்களில் ஒன்று. ஆனால் துப்பாக்கியை தூர எறிந்துவிட்டு கும்பிடுவது ரஜினி உள்ளிட்ட எல்லாரையும் மகிழ வைத்திருப்பதாக கூறுகிறார்கள். அதன் விளைவாக சிங்காரவேலன் ரஜினியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம்.

‘ஒரு லஞ்ச்சோடு மீட் பண்ணுவோம்’ என்று பெருந்தன்மையாக கூறியிருக்கிறாராம் ரஜினியும்.

0 comments:

Post a Comment