
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் , காஜல் அகர்வால் நடிப்பில் ‘ மாரி’ படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்துவிட்டன. இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவுடனான படப்பிடிப்புகள் துவங்கிவிட்டன.
சமந்தா, எமி ஜாக்சன் , தனுஷ் நடிக்கும் இப்படத்தை வேல்ராஜ் இயக்க இருக்கிறார். மேலும் படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து இப்படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வீடியோவாகவும் வெளியிட்டனர்.
இந்த படத்தையடுத்து தனுஷ் , பிரபுசாலமன் படத்தில் இணைய இருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு இளைஞனின் கதையாக உருவாக உள்ளது. இதற்காக தற்போது பிரபுசாலமன் ரயிலில் பயணம் மேற்கொண்டு லோகேஷன்களை தேர்வு செய்யும் வேலையில் இருக்கிறார்.
இமான் இசையமைக்க உள்ள இப்படத்தை மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரிக்க உள்ளனர். மேலும் புதுமுக நடிகை நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment