Monday, March 23, 2015


‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா'  படத்தையடுத்து ஆர்.கண்ணன் இயக்கும் படம் ‘போடா ஆண்டவனே என் பக்கம்' . இதுபற்றி அவர் கூறியது:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசனம்தான் பட டைட்டில். காதல், காமெடி, ஆக்ஷன், திரில்லர் என எல்லா அம்சமும் கலந்த படம். விஷ்ணு ஹீரோ, ‘பிசாசு'  படத்தில் நடித்த பிரயாகா ஹீரோயின். இவரை தேர்வு செய்ததுபற்றி கேட்கிறார்கள். பிசாசு படத்தில் ஒரேயொரு காட்சியில் வரும் பிரயாகா, பளீரென கன்னத்தில் அறைந்ததுபோன்ற அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அது என்னை கவர்ந்தது. அந்த ஒரு காட்சிக்காகவே அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தேன். என் படத்தில் ஹீரோவுக்கு சமமாக ஹீரோயினுக்கும் நடிக்க வாய்ப்பிருக்கும். அதற்கு அவர் பொருத்தமாக இருந்தார். விஜயராஜ் ஜோதி தயாரிக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு.இப்படத்துக்காக சென்னையில் உள்ள ரிச்சி தெருபோல் தத்ரூபமாக அரங்கு அமைத்து படமாக உள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கி 50 நாட்கள் நடக்கிறது. செப்டம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. 

0 comments:

Post a Comment