
எத்தனை மியூசிக் ஆல்பங்கள் வெளிவந்தாலும் அத்தனை ஆல்பங்களும் ஹிட்டாவதில்லை. அப்படியே ஹிட்டானாலும் அதன் இசையமைப்பாளருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. இந்த விஷயத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அதிர்ஷ்டக்காரர் மட்டுமல்ல அசாத்திய திறமைசாலியும் கூட.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் மூலம் தமிழ்த்திரையிசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார் ஆதி. ஹிப் ஹாப் தமிழா ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, இன்று நேற்று நாளை படத்துக்கு அவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தனர். சி.வி.குமார் தயரிரிக்கும் இந்தப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக முடங்கிப்போனது. பின்னர் பைனான்ஸ் வாங்கி ஒருவரியாக படத்தை முடித்தனர்.
ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி பல மாதங்களாகியும் இன்று நேற்று நாளை படம் வெளிவரவில்லை. எனவே சுந்தர்.சி. மூலம் விஷாலின் ஆம்பள படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார். ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து அவரைத் தேடி தற்போது பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம்.
இன்று நேற்று நாளை படம் வெளிவரவதற்கான அறிகுறியே இல்லாததினால் அந்தப் படத்தை மறந்துவிட்டு, தற்போது ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்திற்கு இசையமைக்கும் வேலையில் பிஸியாகிவிட்டார் ஆதி. தனி ஒருவன் படத்திற்காக ஆதியின் இசையில் தற்போது ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுவிட்டதாம். ஜெயம் ராஜா இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment