Saturday, March 7, 2015


ஆந்திராவில் டிவி சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பளரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ராஜீவ் நகர் மியாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (வயது 25). இவர் டி.வி. தொடர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் தொடரில் பிரபல டி.வி. நடிகை சந்தியா நடித்து வந்தார். அந்த டி.வி. நடிகை பல்வேறு முன்னணி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

டி.வி. தொடரில் நடித்த போது தயாரிப்பாளர் வெங்கடாசலபதி அந்த நடிகையிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பின் போது நேரங்களில் ஆபாச வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்தார். அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்தார். அடிக்கடி சந்தியாவின் வீட்டுக்கும் சென்று தகாத வார்த்தைகளில் பேசினார். வெங்கடாசலபதியின் தொந்தரவு பொறுக்காமல் அவர் தயாரிக்கும் தொடரில் நடிப்பதை நடிகை சந்தியா நிறுத்தி விட்டார். அதன் பிறகும் சந்தியா செல்லும் இடங்களுக்குகெல்லாம் தயாரிப்பாளர் வெங்கடாசலபதி பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.


இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போர்பண்டா அவுட் போஸ்ட் போலீஸ் நிலையத்துக்கு நடிகை சந்தியா சென்று தயாரிப்பாளரின் செக்ஸ் தொல்லை குறித்து கூறினார். அவரை எச்சரித்து அனுப்புமாறு தெரிவித்தார். ஆனால் புகார் கொடுங்கள் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். புகார் கொடுத்தால் தனது பெயர் வெளியாகி விடும் என்பதால் நடிகை புகார் கொடுக்கவில்லை. இதனால் அப்போது போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

அதன் பிறகும் தயாரிப்பாளர் வெங்கடாசலபதியின் தொந்தரவு நீடித்துள்ளது. சம்பவ தினத்தன்று கோல் கொண்டா கோட்டை பகுதிக்கு சந்தியா சென்றிருந்தார். அவர் அங்கு வருவதை அறிந்த தயாரிப்பாளர் வெங்கடாசலபதியும் அங்கு வந்து நடிகையிடம் ஆபாசமாக பேசினார். இதனால் அவர் அங்கியிருந்து தனது வீட்டுக்கு சென்று விட்டார். உடனே தயாரிப்பாளரும் விடாமல் நடிகையை பின் தொடர்ந்து அவரது வீட்டுக்கே சென்று தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த நடிகை தனது கணவருடன் எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தயாரிப்பாளர் வெங்கடாசலபதி மீது புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சீரியல் தயாரிப்பாளர் வெங்கடாசலபதியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment