Wednesday, March 11, 2015


புலி படத்திற்காக தனது எடையை அதிகரிக்க உள்ளாராம் இளைய தளபதி விஜய். சிம்புதேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் புலி. புலி படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே அது பற்றிய செய்திகள் அவ்வபோது வெளிவருகின்றன. புலி படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரகங்களில் நடிக்கிறார்.

அப்பா, மகன் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்ட விரும்புகிறாராம் விஜய். அதனால் அப்பா கதாபாத்திரத்திற்காக எடையை அதிகரிக்க முடிவு செய்துள்ளார்.

விக்ரம், சூர்யா ஆகியோர் தான் தங்களின் கதாபாத்திரத்திற்கேற்ப உடல் எடையை அதிகரித்தும் குறைத்தும் வருகிறார்கள். இந்நிலையில் முதன்முறையாக விஜய் தனது உடல் எடையை அதிகரிக்க உள்ளார்.

அப்பா கதாபாத்திரத்திற்காக தனது குரலை மாற்றிப் பேசவும் முடிவு செய்துள்ளாராம் இளைய தளபதி.

புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. அங்கு சில சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment