Wednesday, March 25, 2015


ஒரு நடிகரை மக்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தால்போதும்.... திரையுலகமே அந்த நடிகரின் பின்னால் ஓட ஆரம்பித்துவிடும். தயாராகும் அத்தனை படத்திலும் அந்த நடிகரை நடிக்க வைக்க முயற்சி செய்வார்கள். நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமான மொட்டை ராஜேந்திரனை ராஜாராணி படத்தில் காமெடியனாக நடிக்க வைத்தார் அட்லி. அதன் பிறகு டார்லிங் படத்தில் மந்திரவாதியாக காமெடி நடிப்பில் கலக்கினார். அடுத்து வெளியான இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் மொட்டை ராஜேந்திரன் செமத்தியாய் ஸ்கோர் பண்ணினார். அவரை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் டிரெய்லருக்கு ஏக வரவவேற்பு கிடைத்தது. எனவே இவனுக்கு தண்ணில கண்டம் படம் வெளியான அன்று பப்ளிசிட்டியில் படத்தின் ஹீரோவான தீபக்கை ஓரங்கட்டிவிட்டு, மொட்டை ராஜேந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 

இப்படியாக மொட்டை ராஜேந்திரனின் மார்க்கெட் எகிறிவிட்டதால், புதிதாக தயாராக உள்ள பல படங்களுக்கு அவரை கமிட் பண்ண ஆரம்பித்துள்ளனர். இன்று தொடங்கப்பட்ட் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் சௌகார்பேட்டை படத்திலும் மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சவுகார்பேட்டை படத்தில் மொட்டை ராஜேந்திரன் உடன் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணந்து காமெடி செய்கின்றனர்.

0 comments:

Post a Comment