Thursday, March 12, 2015

charmi1-600x300
சினிமா ஆசையில் வரும் சில புதுமுகங்கள் தயாரிப்பாளருக்கோ, இயக்குனருக்கோ பணம் கொடுத்து வாய்ப்பு கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை சைலன்ட் பார்ட்னர்களாக இணைத்துக்கொண்டு நடிக்க வாய்ப்பு தருவது அவ்வப்போது நடக்கிறது.
இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க சார்மி பணம் கொடுத்து நடிக்கிறார். டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத்துடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார் சார்மி. பாலிவுட்டில் கலக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ‘புட்டா ஹோகா தேரா பாப்‘ படத்தை இயக்கினார் புரி. அமிதாப்பச்சன் நடித்த இப்படத்தில் சார்மியையும் பாலிவுட்டிற்கு அறிமுகப்படுத்தினார். எதிர்பார்த்தளவுக்கு சார்மிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதற்கிடையில் தெலுங்கில் தனக்கென சார்மி பிடித்து வைத்திருந்த இடமும் பறிபோனது.
மீண்டும் தெலுங்கிற்கு வந்த புரி ஜெகநாத் ஹிட் படம் கொடுத்து தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். சார்மியால் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் திணறினார். சார்மிக்கு மீண்டும் ஒரு ஹிட் படத்தை தருவதாக புரி ஜெகநாத் உறுதி அளித்திருந்தார். அதற்காக உருவான ஸ்கிரிப்ட்தான் ஜோதி லட்சுமி. இதில் ஹீரோயினாக நடிக்கிறார் சார்மி.
படத்தை பிரமாண்டமாக உருவாக்குவதால் தனது பங்குக்கு சார்மியும் முதலீடு செய்திருக்கிறாராம். இயக்குனரும் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டிருக்கிறாராம். இப்படம் தன்னை மீண்டும் டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரவைக்கும் என்ற எண்ணத்துடன் காத்திருக்கிறார் சார்மி.

0 comments:

Post a Comment