Friday, March 27, 2015

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த குழந்தைகளுக்கான படமாக, 'காக்கா முட்டை'தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் தேர்வாகியுள்ளனர்.
மணிகண்டன் இயக்கியிருக்கும் ’காக்கா முட்டை’ படத்தை தனுஷின் வுண்டர்பாரும்வெற்றிமாறனின் கிராஸ் ரூட்டும் இணைந்து தயாரித்தனவிருது கிடைத்ததையடுத்து, ’காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும்தேசிய விருது பெற்ற சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் தனுஷ் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.
தற்போது ’காக்கா முட்டை’யின் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறதுபடம் கோடை விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளதுஇது தவிர்த்து சிறந்த தமிழ் படமாக ‘குற்றம் கடிதல்’ சிறந்த துணை நடிகராக ‘பாபி சிம்ஹா’ சிறந்த பாடகியாக ‘சைவம் பட பாடல் பாடிய உத்தரா சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமாருக்கு, 'சைவம்பட பாடலுக்காக கிடைத்துள்ளது. 'ஜிகர்தண்டாஎடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
இதே போல் சென்ற வருடமும் சிறந்த எடிட்டிங் ‘வல்லினம்’ படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment