Sunday, March 1, 2015

arun4-600x300
அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான படம் என்னை அறிந்தால். ஏ.எம் ரதனம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துக்கு இணையாக நடித்திருந்தார் அருண் விஜய்.
படத்தில் விக்டராக வரும் அவர் மிரட்டலாக நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறினர். தொடர்ந்து 10 வருடங்களாக ஒரு வெற்றி படமாவது கொடுக்க வேண்டும் என்று போராடி வருந்த அருண் விஜய்க்கு இப்படம் நல்ல வெற்றி படமாக அமைந்தது. அதற்கு இடையில் வந்த ’தடையற தாக்க’ படம் ஓரளவுக்கு நல்ல படமாக அமைந்தாலும் இப்படம் தான் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.
இந்நிலையில் இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த அருண் விஜய் , தற்போது கோவில் கோவிலாக சென்று வழிப்பட்டு வருகிறாராம். நேற்றுக்கூட திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தாராம்.

0 comments:

Post a Comment