Thursday, March 5, 2015

கொம்பன் படத்தால் கருணாஸ்க்கு கிடைத்த பெருமை - Cineulagam
இயக்குனர் பாலாவின் அறிமுகத்தால் நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகர் கருணாஸ்.
அதன் பிறகு ஒரு பிரபலான காமெடியனாக வலம் வந்த அவர் கூடவே சில நல்ல படங்களை விநியோகமும் செய்தார்.
அவர் செய்த விநியோகத்தில் குறிப்பிடதக்க படம் ராம் இயக்கத்தில் வந்த "தமிழ் எம். ஏ. இதனிடையில் ஹீரோ ஆகும் ஆசை அவருக்கு தலை தூக்க திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா போன்ற படங்களில் நடித்தார்.
இந்த ஹீரோவாக நடித்த சில படங்கள் சரியாக போகாததால் அவர் மார்க்கெட்டை காலி செய்ய வேறு வழி இல்லாமல் திரும்பவும் காமெடி வேடத்தை தேடி அலைந்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு அமைந்தது தான் டார்லிங். குறைந்த சம்பளமாக இருந்தாலும் நடித்தார்.
டார்லிங் ஹிட்டானதையடுத்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலே கொம்பன் படத்தில் நடித்துள்ளார். இன்று கொம்பன் படத்தின் பாடல் வெளியிட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கருணாஸ் கொம்பன் எனக்கு 100வது படம் என மகிழ்ச்சியோடு கூறினார்.

0 comments:

Post a Comment