Friday, March 13, 2015


விநியோகஸ்தர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் பதிலடி-ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam

இந்திய சினிமாவின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான். இவர் படங்கள் வருகிறது என்றாலே தமிழகத்திற்கு திருவிழா தான். ஆனால், கடைசியாக இவர் நடித்த லிங்கா திரைப்படம் வசூலில் சற்று சறுக்கியது.
இதையே ஒரு காரணமாக காட்டி ரஜினி பெயரை கெடுக்க வேண்டும் என்று சிலர் போராட்டம், தரகுறையாக பேசுவது என செய்து வந்தனர். இதையெல்லாம் பொறுமையாக பார்த்து வந்த ரஜினி, தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.
தெலுங்கில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஸ்டாலின் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் ரீமேக் உரிமையை ஆஸ்கர் நிறுவனம் வாங்கி, ரஜினியை நடிக்க வைக்க முயற்சி செய்தது. இப்படத்தை இயக்க முருகதாஸ் சம்மதித்து இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், ரஜினி ஆஸ்கர் நிறுவனத்திற்கு போட்ட ஒரே கண்டிஷன் இப்படத்தை தமிழகம் முழுவதும் நீங்கள் தான் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. எது, எப்படியோ சூப்பர் ஸ்டாரை அடுத்த அதிரடிக்கு அவர்கள் அடித்தளம் அமைத்து கொடுத்து விட்டார்கள்.

0 comments:

Post a Comment