Friday, March 27, 2015


பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார்.

தற்போது திடீரென அந்த படத்திலிருந்து ஸ்ருதி விலகியுள்ளாராம். ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழில் விஜய்யுடன் புலி, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஒரு படம் மற்றும் இந்தியில் ஒருசில படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

இதனால் கார்த்தி படத்திற்கு கால்ஷீட் தரமுடியவில்லை என்று அவர் காரணம் கூறியிருக்கிறார்.

ஆனால், கார்த்தி படத்தை விட அஜித் படத்திற்கு அதிக சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டதால் அந்த கால்ஷீட்டை தல 56வது படத்திற்கு கொடுத்து விட்டதாகவும், இது தான் கார்த்தி படத்திலிருந்து விலகியதற்கான உண்மையான காரணம் என்றும் கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

latest news - 

0 comments:

Post a Comment