Saturday, March 28, 2015


முன்னாள் கதாநாயகியான மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்', விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்', பாபி சிம்ஹாவுடன் 'பாம்பு சட்டை' என 3 படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்! 

தமிழில் கதாநாயகி பஞ்சம் தலவிரித்தாடும் சூழலில் அடுத்து முதல்வரிசை கதாநாயகி ஆகும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு உள்ளது.

அதற்கான அறிகுறியாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை.

இந்நிலையில், ஜீவா நடிக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் நடிக்கவும் கீர்த்திக்கு அழைப்பு வந்துள்ளது. 

'யாமிருக்க பயமே' படப் புகழ் டீகே இயக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவாவுடன் பாபி சிம்ஹா, இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். 

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கத்தான் கீர்த்திக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்! 

அதனாலோ என்னவோ இப்படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி இன்னும் முடிவு செய்யவில்லையாம்! 

ஜீவா நடித்த 'யான்' படம் உட்பட பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்திருப்பதால் அவருக்கு ஜோடியாக நடிப்பதை ரிஸ்க் என்று நினைக்கிறாராம்.

ஜீவாவுடன் நடிப்பது குறித்து கீர்த்தியிடம் கேட்டால், ''பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, கால்ஷீட் ஒத்து வந்தால் ஜீவாவுடன் கண்டிப்பா நடிப்பேன்'' என்று சமாளிக்கிறார் கீர்த்தி!

0 comments:

Post a Comment