விஷால்-சுசீந்திரன் படத்தின் பாயும் தலைப்பு
விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் உருவான 'பாண்டிய நாடு' வெற்றி படத்தை அடுத்து இதே கூட்டணி மீண்டும் தற்போது ஒரு படத்தில் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு 'காவல் கோட்டம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் அந்த தலைப்பை படக்குழுவினர் மறுத்தனர். இந்நிலையில் நேற்று முதல் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ள இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
விஷால்-சுசீந்திரன் இணையும் இந்த படத்திற்கு 'பாயும் புலி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே தலைப்பில் கடந்த 1983ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் தற்போது 'புலி' என்ற டைட்டிலில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் விஷால் தனது படத்திற்கு 'பாயும் புலி' என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார். இது விஷால் நடிக்கும் 19வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

0 comments:
Post a Comment