கோலிவுட்டிலிருந்து டோலிவுட் சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் சார்மி. வேகமாக வந்த பட வாய்ப்புகளுக்கு திடீரென்று பிரேக் விழுந்தது.
இந்நிலையில்தான் தெலுங்கில் அனுஷ்கா நடித்த ‘தமருகம்‘, காஜல் அகர்வால் நடித்த ‘நாயக்‘, கன்னடத்தில் பாவனா நடித்த யாரே கூகாடாலி, இந்தியில் சோனாக்ஷி சின்ஹா நடித்த ஆர் ராஜ்குமார் படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வந்த வாய்ப்புகளை ஏற்று நடித்தார். இதற்கிடையில் இயக்குனர் புரி ஜெகநாத், இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் காதல் கிசுகிசுவும் வெளியானது.
அதுவும் புஸ்வானமானது. காதல் கைகூடாத ஏக்கத்தை காதல் தினத்தன்று தனது இணைய தள பக்கத்தில் சார்மி வெளிப்படுத்தி இருந்தார்.
காதல் வாழ்த்தோ, காதலர் தின வாழ்த்தோ சொல்லி யாரும் மெசேஜ் போடாததால் அப்செட் ஆனார். பிறகு தனக்கு தானே காதல் கடிதம் எழுதி தன்னுடைய இணைய தள பக்கத்தில் சமர்ப்பித்துக்கொண்டார். முன்னணி நடிகைகள் நடிக்கும் படங்களில் மற்றொரு ஹீரோயின் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடாமல் ஒதுங்கி விடுகின்றனர். ஆனால் சார்மி விதிவிலக்கு.
ஏற்கனவே அனுஷ்கா, காஜல் அகர்வால் நடித்த படங்களில் குத்தாட்டம் ஆடியதையடுத்து அடுத்து சமந்தா நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள‘ படத்தில் குத்தாட்டம் போட அழைப்பு வந்திருக்கிறது. அதையும் ஏற்றார். இப்போது ஹீரோயின் வேடமே எதுவும் வராததால் அவர் அப்செட்டில் இருக்கிறாராம்.

0 comments:
Post a Comment