Wednesday, March 4, 2015


ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த லிங்கா திரைப்படம் தோல்வியடைந்தது. தற்போது இப்படத்தில் சந்தானம் எப்படி வந்தார் என்பது குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

முதலில் சந்தானம் கதாபாத்திரத்தில் வடிவேலுவை தான் நடிக்க முயற்சி செய்தார்களாம். அவர் ரூ 10 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறினாராம். அதைக்கேட்டு வடிவேலுவா இப்படி என்று ரஜினி அதிர்ச்சியாகி விட்டாராம். பிறகுதான் லிங்கா படத்தில் சந்தானம் கமிட் ஆனதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment