Wednesday, March 4, 2015


வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி பண்ண விரும்புகிறேன். என் அடுத்த படத்தில் அவர் இருக்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டு, அவரை ஒப்பந்தம் செய்ய வைத்தாராம் நடிகர் விஜய்.

வடிவேலு - விஜய் கூட்டணியில் வந்த அத்தனைப் படங்களிலும், நகைச் சுவைக் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு அமைந்தன. ப்ரண்ட்ஸ், வசீகரா, மதுர, பகவதி, சச்சின், போக்கிரி, வில்லு, காவலன் ஆகிய படங்களில் இவர்களின் நகைச்சுவை உச்சம் தொட்டது.

விஜய்யின் ஆரம்ப காலப்படமான சந்திரலேகாவிலேயே விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார் வடிவேலு.

விஜய் தனது ஆரம்ப நாட்களிலிருந்து உடன் பயணித்த வடிவேலு, இன்று கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளார். மற்ற பெரிய நடிகர்கள் படங்கள் எதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சூழலில், தனது அடுத்த படத்தில் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று அட்லீயிடம் கூறியுள்ளார்.

அட்லீ இயக்கும் இந்த படத்துக்காக வடிவேலுவுடன் பேசி, விஜய்யின் விருப்பத்தைச் சொன்னாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. வடிவேலுவும் சம்மதித்துவிட்டதாகத் தகவல்.

0 comments:

Post a Comment