
இயக்குனர் பாரதி மோகன் இயக்கி வரும் திரைப்படம் 'எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'. இந்த படத்தில் அறிமுக ஹீரோ விக்ரம் சிவா மற்றும் சாரா தேவா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு 'எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" என்ற டைட்டிலுடன் சமீபத்தில் ஒரு படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுக்கும் பாரதி மோகன் படத்தின் டைட்டிலுக்கும் 'எங்கும்' என்ற வார்த்தை மட்டுமே வித்தியாசம் உள்ளதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்றும் பாரதி மோகன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே 'எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது' என்ற டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து அதை வருடந்தோறும் புதுப்பித்து வருவதாகவும், தற்போது கவுண்டமணி நடிக்கவுள்ள புதிய படத்தால் தங்கள் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறிய பாரதிமோகன், கவுண்டமணி நடிக்கும் படத்தின் டைட்டிலை மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இவருடைய கோரிக்கைக்கு கவுண்டமணி படக்குழுவினர் செவி சாய்ப்பார்களா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
0 comments:
Post a Comment