உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் அமீர்கானின் 'பிகே' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் கமல்ஹாசன் தனது அடுத்த படம் குறித்து பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்கள் வீரேந்தர் அரோரா மற்றும் அர்ஜூன் கே.கபூர் அவர்களிடம் ஆலோசனை செய்ததாகவும், கமல் கூறிய கதை அவர்களை மிகவும் இம்ப்ரஸ் செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் இணை தயாரிப்பு நிறுவனமாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அண்டர்கிரவுண்ட் அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக பணமாற்றம் செய்யும் முறையை விறுவிறுப்புடன் கூடிய கதையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்த படத்தை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கி ஐந்தே மாதங்களில் மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment