Wednesday, March 4, 2015

Thamarai Continues Her 6th Day Dharna

கவிஞர் தாமரை வீட்டை விட்டு வெளியேறிய கணவர் தியாகு மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழக்கோரி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே சூளைமேடு பகுதியில் இருக்கும் தியாகு அலுவலகத்தில் தர்ணா நடத்தினார்.
அதன் பிறகு தியாகு வசிக்கும் வேளச்சேரி வீட்டு முன்னால் தர்ணா போராட்டத்தை நடத்தினார். அந்த வீட்டில் இருந்தும் தியாகு வெளியேறி விட்டதால் நேற்று கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே உள்ள பூங்கா அருகில் தனது போராட்டத்தை தொடர்ந்தார். இரவு பகலாக தெருவிலேயே இருந்து ஆறாவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர்கிறார். தனக்கு தொலைபேசி மூலமாக மட்டுமே ஆதவு தரும் தமிழ் தலைவர்களை பகிரங்க ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறார். தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என்று அறிவித்து உள்ளார்.

0 comments:

Post a Comment