உத்தம வில்லன் படத்தில் ஜிப்ரான் நடித்துள்ளாரா?
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ரிலீஸான டிரைலரின் ஒரு ஷாட்டில் இசையமைப்பாளர் ஜிப்ரானும் மற்றும் ஒருசில காட்சிகளில் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் வருவதை நாம் பார்த்திருப்போம். இதனால் இருவரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து படக்குழுவினர் விளக்கமளித்தபோது, 'உத்தம வில்லன்' படத்தில் இடம்பெறும் வில்லுப்பாட்டு ஒன்றில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் ஜிப்ரான் தோன்றுவதாகவும், ஒருசில காட்சிகளில் சினேகன் தோன்றுவதாகவும், ஆனால் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை என்றும் கூறினர்.
உத்தம வில்லன் படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், ஜிப்ரானின் கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்துள்ளதாகவும் கோலிவுட் செய்திகள் கூறுகின்றன. இந்த படத்தின் இசை சிடி விற்பனை திருப்திகரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தில் கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஜெயராம், ஊர்வசி, கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் உள்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

0 comments:
Post a Comment