Wednesday, March 4, 2015


முனி, முனி 2 காஞ்சனா படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் திரைப்படம் 'காஞ்சனா 2. கடந்த இரண்டு படங்களை போலவே இந்த படமும் பேய் சம்பந்தப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை ஒரு பேய் கேரக்டர் மட்டும் தன் படத்தில் வைத்திருந்த லாரன்ஸ், காஞ்சனா 2 படத்தில் நான்கு பேய் கேரக்டர்களை வைத்துள்ளதாகவும், அதுவும் 15, 25, 40 மற்றும் 60 வயது பெண்களின் பேயாக அது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் காஞ்சனா 2' படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ், டாப்சி, நித்யா மேனன், தேவதர்ஷினி, கோவை சரளா, மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ராஜவேல் ஒளிவீரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பெல்லகொண்டா சுரேஷ் தயாரித்துள்ளார்

0 comments:

Post a Comment