‘கோலிசோடா' பட இயக்குனர் விஜய் மில்டன். விக்ரம் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள‘ படத்தை இயக்கி வருகிறார்.
இதில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், பசுபதி, மனோபாலா, மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் விக்ரம் லாரி டிரைவராக வருகிறார். படத்தின் கதையே, சென்னையில் இருந்து வட இந்தியாவுக்கு செல்லும் லாரி டிரைவர் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை சார்மி ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடவுள்ளார் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். சமீபத்தில் இந்தப் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதுவும் ஐந்து நாட்களில்.
கதையின் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளதாம். இந்த ஒரு பாடலுக்காக மட்டும் ரூ.3 கோடி செலவில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளதாம். சார்மியின் சம்பளம் மட்டும் ரூ. 30 லட்சம் என்கிறார்கள். விரைவில் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற உள்ளது. படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment