‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வினய்.
இவர், ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’, ‘ஒன்பதுல குரு’, ‘அரண்மனை’ உள்ளிட்ட படங்களிலும் நாயகனாக நடித்து இருக்கிறார். தற்போது இவரது கைவசம் ஆயிரத்தில் இருவர், ஆள் அப்பு சேனை, சேர்ந்து போலாமா என மூன்று படங்கள் உள்ளன. ஆயிரத்தில் இருவர், ஆள் அப்பு சேனை ஆகிய படங்களை சரணும், சேர்ந்து போலாமா படத்தை அனில் குமாரும் இயக்கி வருகின்றனர்.
இதில் சேர்ந்து போலாமா படத்தில் வினய்க்கு ஜோடியாக மதுரிமா நடிக்கிறார். சி நம்பீசன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நியூசிலாந்தில் நடைபெற்றது. அப்போது, வினய் தனது சம்பளத்தின் பாக்கி தொகையான 17 லட்சம் ரூபாயை உடனே தர வேண்டும் என்று கேட்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பட தயாரிப்பாளர் சசி நம்பீசன் புகார் செய்து இருக்கிறார்.
இதுகுறித்து வினய்யிடம் கேட்டபோது, ஒப்பந்தத்தின்படி, எனக்கு தயாரிப்பாளர் சசி நம்பீசன் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னையில், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி தலையிட்டு, என் சம்பளத்தில் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை விட்டுக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, நானும் அந்த தொகையை விட்டுக் கொடுத்துவிட்டேன். மீதி 4 லட்சத்து 50 ஆயிரத்தை தருவதாக முன்பு ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர் சசி நம்பீசன், இப்போது ‘அந்த தொகையையும் தர முடியாது. உன்னால் முடிந்ததை செய்னு மிரட்டுகிறார். இதுபற்றி நான் நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment