Friday, March 6, 2015

அஜித், த்ரிஷா, லட்சுமிராய் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம்.
வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் அஜித் ஆன்டி ஹீரோ பாத்திரத்தில் கலக்கியிருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறாராம் வெங்கட் பிரபு.
இதிலும் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம். இதை அஜித்திடமே சொல்லி விட்டாராம். வெங்கட் பிரபுவின் விருப்பத்திற்கு அஜித் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அடுத்து தான் நடிக்கப் போகும் புதிய படத்தை முடித்த பிறகே அஜித் வர முடியும் என்று தெரிகிறது. ஹிந்தியிலும் அர்ஜூன் தமிழில் நடித்திருந்த அதே பாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
கோலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் மங்காத்தா படத்தினை ஹிந்தியில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டால் இந்நிறுவனம் தயாரிக்கவிருக்கும் முதல் இந்தி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment