Saturday, March 28, 2015

ஆர்யா விஜய்சேதிபதி, ஷாம், கார்த்திகா  நடித்த ’புறம்போக்கு’ படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

’இயற்கை’,’ ஈ’, ’பேராண்மை’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் ’புறம்போக்கு’. இந்தப் படத்தை யுடிவி நிறுவனமும் எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸூம் இணைந்து தயாரித்துள்ளது.
வர்ஷன் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய ஷாம், கார்த்திகா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.  பாலுவாக ஆர்யாவும், எமலிங்கமாக விஜய் சேதிபதியும், குயிலி என்ற பெயரில் கார்த்திகாவும், போலீஸாக ஷாமும் நடித்துள்ளனர்.
ராஜஸ்தான், அந்திரா, சென்னை, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தின் அனைத்துக் கட்ட பணிகளும் முடிந்த நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் இசை வெளியீடும், மே 1ல் படமும் வெளியாகின்றது என்று யுடிவி தனஞ்செயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment