Saturday, March 28, 2015

இயக்குநர் ராஜேஷிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா , சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நண்பேன்டா’ . படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
பாடத்தின் பாடல்கள், டீஸர், டிரெய்லர் என வெளியாகி படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. மேலும் படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் இப்படத்தின் கதையை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் போதே உதயநிதியிடம் கூறினாராம். அப்போதே கதையை கேட்ட உதயநிதி பிடித்துப் போக ஓகே சொல்லிவிட்டாராம். எனினும் முன்பாக ‘இது கதிர்வேலன் காதல்’ வெளியாக வேண்டி இருந்ததால் அந்த படம் வெளியாகியுள்ளது.
ஜெகதீஷ் இது குறித்து கூறுகையில், இந்த படத்தில் உதயநிதி நடிப்பு , நடனம் என எல்லாவற்றிலும் அசத்தியிருக்கிறார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மற்றும் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் இருவரும் படத்துல ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். என நயன்தாரா, மற்றும் சந்தானத்திற்கு புதிய பட்டமே கொடுத்துள்ளார் ஜெகதீஷ். ஏற்கனவே டிடி தனது நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் என அடிக்கடி நயன்தாராவை சொல்வது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment