அய்யய்யோ, நான் 'பவர் ஸ்டாரை' வம்புக்கு இழுக்கவே இல்லை: கதறும் ஹன்சிகா
தான் பவர் ஸ்டார் பவன் கல்யாணை விமர்சிக்கவே இல்லை என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார். நடிகை ஹன்சிகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்ற தேவை இல்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹன்சிகா பவர் ஸ்டார் பவன் கல்யாணை மனதில் வைத்து தான் இப்படி தெரிவித்தார் என்ற பேச்சு தீயாக பரவியது. இதனால் ஹன்சிகாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை செய்கிறேன் என பல பிரபலங்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கூறி சில டிவி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.
செய்தி மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்த்த பவன் கல்யாணின் ரசிகர்கள் கடுப்பாகி ஹன்சிகாவை திட்டித் தீர்க்க ஆரம்பித்தனர்.
தான் ஏதேச்சையாக கூறியது இப்படி திரித்து தனக்கு எதிராக திரும்பிவிட்டது பற்றி ஹன்சிகாவுக்கு தெரிய வந்து கலக்கம் அடைந்தார்.
பவன் கல்யாணை நினைத்தோ அல்லது அவர் பெயரை கூறியோ நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று ஹன்சிகா பதறியடித்துக் கொண்டு தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment