Wednesday, March 11, 2015


அறிமுக படத்தில் கொஞ்சம் புஷ்டியாய் இருந்த ஹன்சிகா தற்போது செம ஸ்லிம்மாகி இருக்கிறார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உடல் எடையைக் குறைத்து, தனது அழகை மெருகேற்றி வருகிறார் அவர். 

இந்தாண்டு கைவசம் அதிக படங்கள் வைத்துள்ள நாயகிகளுள் முன்னணியில் இருக்கிறார் ஹன்சிகா. வாலு, வேட்டைமன்னன், ரோமியோ ஜூலியட், புலி என இவரது படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. 

இந்நிலையில், வார இதழ் ஒன்றிற்கு தனது ஸ்லிம் சீக்ரெட்டைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஹன்சிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது :-

காலையில எழுந்ததும் யோகா பண்றேன். அது மனசையும், உடம்பையும் ரிலாக்ஸ் ஆக்கிரும்.

அப்புறம் நேரத்துக்கு நல்ல டயட் சாப்பிடுறேன். இன்னொரு முக்கியமான விஷயம்... நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்குவாஷ் விளையாடுவேன்.

அது தான் என்னை செம எனர்ஜியா வெச்சிருக்கு. இதெல்லாம் தான் என் ஸ்லிம் சீக்ரெட்ஸ்.

ஆனா, என் வெயிட்டைக் கேட்காதீங்க. இன்னும் கொஞ்சம் குறைக்கணும். குறைச்சுட்டு அப்புறமா சொல்றேன்' எனத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment