Thursday, March 5, 2015


தெலுங்கு படவுலகின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ள 'பாஹுபாலி' படத்தின் ரிலீஸ் தேதி மே மாதம் 15ஆம் தேதி என உறுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முற்றிலும் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அனுஷ்காவுக்கு இணையாக முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை தமன்னா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'பாஹுபாலி படப்பிடிப்பின்போது ஒரு நடிகையாக எனக்கு ஏற்பட்ட மிக அற்புதமான அனுபவங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது எனக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாக கருதுகிறேன்' என்று எமோஷனலாக கூறியுள்ளார்.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, நாசர், சத்யராஜ் உள்பட மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தமிழ் உரிமையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment