Saturday, March 7, 2015



சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசன் குறித்து கூறும்போது தனது மகள் நல்ல எழுத்துத்திறமை உள்ளவர் என்றும், அவர் நிறைய கதை மற்றும் திரைக்கதையை எழுத வேண்டும் என்றும் ஆலோசனை கூறியிருந்தார். எனவே கமல்ஹாசனின் அறிவுரையை ஏற்று ஸ்ருதிஹாசன் விரைவில் கதை எழுதுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஸ்ருதிஹாசன் இப்போதைக்கு தான் எழுதுவதாகவோ அல்லது இசையப்பதாகவோ எண்ணம் இல்லை என்றும் தனது முழு கவனமும் நடிப்பதில்தான் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, திரையுலகில் நடிகர்கள் போல நடிகைகளால் நீண்ட நாள் தாக்கு பிடிக்க முடியாது. நடிகைகளின் திரையுலக வாழ்க்கை சில வருடங்கள்தான் இருக்கும். எழுதுவதற்கு பேனாவும் பேப்பரும் இருந்தால் போதும், ஐம்பது வயதிலும் எழுதலாம். அதேபோல் இசையமைப்பதில் ஆர்வம் காட்டினால் எந்த வயதிலும் இசையமைக்கலாம், ஆனால் இளமையும் வாய்ப்பும் உள்ள போது மட்டுமே நடிகையாக ஜொலிக்க முடியும் என்பதால் என் கவனம் முழுவதும் நடிப்பதில்தான் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்யுடன் புலி, மற்றும் பெயர் வைக்கப்படாத ஒரு தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுடனும் நடித்து வருகிறார். இது தவிர நான்கு இந்தி படங்களும் அவர் கையில் உள்ளது. மேலும் அஜீத் நடிக்கவுள்ள 'தல 56' படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment